திருமதி ஸ்ரீமதி சொர்ணாம்பாள் வைத்தியநாத சர்மா
மறைவு: 20 செப்டம்பர் 2026
யாழ்/ மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து லூட்டனை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சொர்ணாம்பாள் வைத்தியநாத சர்மா அவர்கள் இன்று 20/09/2026 , இங்கிலாந்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், மாவிட்டபுரம் ஸ்வர்க்கஸ்ரீ வைத்தியநாதக் குருக்கள் தம்பதிகளின் புதல்வியும்,
யாழ் நாவலர் பாடசாலை முன்னைநாள் தலைமை ஆசிரியர் ஸ்வர்க்கஸ்ரீ க. வை. ஆத்மநாத சர்மா தம்பதிகளின் மருமகளும்,
அமரர் ஸ்ரீமதி சொர்ணாம்பாள் வைத்தியநாத சர்மா அவர்கள் , கோமதி ( ராதா), பிரம்மஸ்ரீ ஆத்மநாத சர்மா, பிரம்மஸ்ரீ ரமணானந்த சர்மா ஆகியோரின் தாயாரும்,
ஸ்ரீமதி பவானியின் (பாரதி) மாமியாரும்,
அரவிந்த், திவ்யா, அஸ்வின் , ஸ்வரஜா ஆகியோரின் பாட்டியும்,
மித்ரா, ருத்ரா ஆகியோரின் பூட்டியுமாவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அமரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
ஓம் சாந்தி.
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2026 03:04)
