திருமதி சோதீஸ்வரி செல்வராஜன்

சோதீஸ்வரி செல்வராஜன்

தோற்றம்: 11 நவம்பர் 1958 - மறைவு: 26 நவம்பர் 2020

யாழ் துன்னாலை பருதித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு, கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோதீஸ்வரி செல்வராஜன் அவர்கள் 26-11-2020ம் திகதி வியாழக்கிழமை இன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஈஸ்வரபாதம் சந்திரவிம்பம் தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ் சென்றவர்களான இரத்தினலிங்கம் இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் செல்வராஜன் (ஐடியல் லொஜ் உரிமையாளர், கொழும்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
அன்னார் சந்திரக்கா (NDB  வங்கி), அருண் (இந்தியா), யாதவன் ( Doctor, Jaffna Teaching Hospital) ஆகியோரின் தாயாரும்,
 
துளசிராம் (Distributors, Chunnakam), பிரவீனா (ஆசிரியர் புங்குடுதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் மாமியாரும்,
 
ஆதித்தியா (St.John's Colleage), ஆருத்திரா, தனுஸ்ரீ ஆகியோரின் பேத்தியிம் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொக்குவில் மேற்கு, நீதிராஜா வீதியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 27-11-2020ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
  

தகவல்:- குடும்பத்தினர், மக்கள், மருமக்கள்

விலாசம்:-  நீதிராஜா வீதி, கொக்கிவில் மேற்கு, கொக்குவில்

                      +94 76 652 9869,   +94 77 283 3242

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2020 06:12)