Mr. Sothilingham Nithursan
(யாழ் சென்ஜோன்ச் கல்லூரி- பழைய மாணவன்)
Date of Birth: 28 August 1996 - Deceased: 24 November 2024
யாழ்.நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோதிலிங்கம் நிதுர்சன் அவர்கள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோதிலிங்கம்-கணேசமலர் (பவானி ஆசிரியை-நீர்வேலி றோ.க.த.க பாடசாலை) தம்பதியினரின் அன்பு மகனும்,
நிசோபன் (HNDM), நிவேதன் (இரண்டாம் வருட மாணவன் - கொழும்பு பல்கலைக்கழகம்), நிவேதா (A/L மாணவி - கலைப்பிரிவு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து-அன்னலட்சுமி மற்றும் இராசையா-தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற குணரத்தினம், நவரத்தினம், சிவலிங்கம் ஆகியோரின் பெறாமகனும்,
ரஞ்சிதமலர், புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, கருணைதாசன் (சுவிஸ்), கிருஸ்ணதாசன் (அப்பன்), சிவதாசன் (கனடா) ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-11-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முகவரி:-
பருத்தித்துறை வீதி,
நீர்வேலி வடக்கு, நீர்வேலி.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
