திருமதி. சோதிமதி விஸ்வநாதன்
தோற்றம்: 21 பெப்ரவரி 1934 - மறைவு: 02 அக்டோபர் 2026
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சோதிமதி விஸ்வநாதன் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை - விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம் விஸ்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
வனஜா சோமஸ்கந்தா (விவாக பதிவாளர்), அனுஜா மகாலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,
சோமஸ்கந்தா (Pettah Essence Suppliers பங்காளர்), மகாலிங்கம் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, துரைராஜசிங்கம், தனபாலசிங்கம், இரத்தினசிங்கம் மற்றும் திலகவதி, குலசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெசானி, கல்யாணி, சரண்ராஜ் (Macmix Ingredients Suppliers உரிமையாளர்), சரணியா, ஜானுகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
அகர்வன் ஆர்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-10-2026 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 748 4092
+94 77 397 0477
www.tamilthakaval.org
