திருமதி. சோதிமயிலும் மார்கண்டு

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

சோதிமயிலும் மார்கண்டு

தோற்றம்: 04 ஜனவரி 1940 - மறைவு: 15 பெப்ரவரி 2026

யாழ். காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கல்லூரி வீதி காங்கேசன்துறை, கனடா, உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சோதிமயிலும் மார்கண்டு அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 86வது வயதில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

ஏழாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - சேதுப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகபூசனி, நாகராஜா, நவயுவநாதன் மற்றும் கமலாதேவி, விமலாதேவி, வசந்தாதேவி, நவரட்னறாஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஆசிரியர் சின்னத்தம்பி, ஓய்வுபெற்ற நுவரெலியா அரசாங்க அதிபர் தங்கத்துரை, ஓய்வு பெற்ற லிகிதர் இராசதுரை, மற்றும் திலகவதி கந்தசாமியின் அன்பு மைத்துனியும்,

ஶ்ரீதரன் (உரும்பிராய்), நிர்மலன் (கனடா), முரளிதரன் (கனடா), பகீரதன் (நோர்வே), சோபனா (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கெளரி மனோகரி ( ஓய்வுபெற்ற உப அதிபர் - வசாவிளான் மத்திய கல்லூரி), ராஜசுகுணா, ஜெயந்தினி, அமிர்தினி, ஶ்ரீதர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரண்யன், பிருந்தினி, தனஞ்சயன் - பானுமதி (பிரித்தானியா), காருண்யன், நிவேதிகா, புருஷோத், பிரவீன் (கனடா), ஜெனனி, ஜெசிக்கா (கனடா), சஞ்சய், ஸ்றையா (அமெரிக்கா), ரிதன், கவின்( நோர்வே) ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,

பிரணவியின் அன்பு பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் விரைவில் பகிரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2026 00:00)