திருமதி. சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம்
(சங்கீத வித்துவான்)
தோற்றம்: 22 அக்டோபர் 1944 - மறைவு: 10 ஜூன் 2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இல -11, பொன்னப்பா ஒழுங்கை, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சௌபாக்கியலக்ஷ்மி சிவஞானம் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் - சரஸ்வதி (புகையிரத திணைக்கள எந்திரி) தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற வடிவேல் - பராசத்தி தம்பதியினரின் மருமகளும்,
சிவஞானம் (Rtt Production Manager Paranthan Chemicals) அவர்களின் அன்பு மனைவியும்,
தக்ஷாயினி (Operations Manager Mercantile Security Services Pvt.Ltt) அவர்களின் அன்புத் தாயாரும்,
விஜயானந்தன் (Assistant Manager Heritage Teas) அவர்களின் அன்பு மாமியாரும்,
தருண் கார்த்திக் (Jaffna Central College) அவர்களின் அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான Dr.ஜெகநாதன், கைலைநாதன், புனிதவதி மற்றும் Dr.விஸ்வநாதன் ஆகியோரின் சகோதரியும்,
மனோரஷிதா, பிரியதர்ஷினி (ஓய்வு நிலை அதிபர்), சசிரூபினி, யோகேந்திரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-06-2025 வியாழக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
