திருமதி. சௌந்தரம் வினாயகமூர்த்தி

(ஓய்வுபெற்ற ஆசிரி​யை - சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம்)

சௌந்தரம் வினாயகமூர்த்தி

தோற்றம்: 22 செப்டம்பர் 1937 - மறைவு: 17 பெப்ரவரி 2025

யாழ். சரவணை கிழக்கை பிறப்பிடமாகவும், Markham - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சௌந்தரம் வினாயகமூர்த்தி அவர்கள் 17-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு இளைய மகளும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வினாயகமூர்த்தி (பண்டிதர் - புளியங்கூடல்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகரன், சிவநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குமரதாசன், யசோதரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, தவநிதிப்பிள்ளை, விசாலாட்சி, குமரையா, சண்முகநாதன், படிகலிங்கம், பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மதுரன், காவியா, ஷாகினி, அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து, சின்னத்துரை, கந்தையா, திருநீலகண்டன், சொர்ணகாந்தி மற்றும் கனகம்மா, காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, குணபூசனி, செல்வநாயகி, சதயலட்சுமி, உலகநாதன் மற்றும் விசாகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2025 05:00)