Mr. Soundrajan Mayolvahanam
Date of Birth: 05 October 1960 - Deceased: 08 August 2025
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Montreal, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சௌந்தராஜன் மயில்வாகனம் அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - சிவானந்தம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜினித்தா, சர்மிலா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
Marc Laperriere அவர்களின் அன்பு மாமனாரும்,
பத்மாவதி, காலஞ்சென்ற சிறீஸ்காந்தரூபன், பிரதாபன், சசிகலா (கனடா), சூரியகலா (இலங்கை), காலஞ்சென்ற மலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பதி (கனடா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், ரவீந்திரன் மற்றும் ஜெகன்மோகன், பாலமோகன் (கனடா), சித்திரா, பத்மினி (கனடா), சந்திரவதனி (பிரான்ஸ்), பத்மாசினி (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரையும், 13-08-2025 புதன்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரையும் Aeterna Funeral Complex (55 Rue Gince, Saint-Laurent QC H4N 1J7) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
