Mr. Sri Puvinthirarajaha Iyyampillai
Date of Birth: 03 December 1957 - Deceased: 01 December 2024
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், Horsens - டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஶ்ரீ புவீந்திரராஜா ஐயம்பிள்ளை அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை-இராசாத்தி தம்பதியினரின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற செல்லையா-யோகேஸ் தம்பதியினரின் ஆசை மருமகனும்,
சுலேகா அவர்களின் அன்புக் கணவரும்,
மாளவிகா, அவனேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஶ்ரீ தேவி (இத்தாலி), ஶ்ரீ தாஸ் (இலங்கை), ஶ்ரீ நவம் (இலங்கை), ஶ்ரீ நிர்மலாதேவி (இலங்கை), ஶ்ரீ ஸ்வரா (இத்தாலி), ஶ்ரீ கவீஸ்வரா (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
செல்வ ரஞ்சித் (பிரான்ஸ்), காலஞ்சென்ற ராதிகா (ஜேர்மனி), செல்வகுமார் (பிரான்ஸ்), ஜெயந்திகா (ஜேர்மனி), சசிரேகா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை (Vestre Kapel, Horsens Vestre Kirkegard Silkeborgvej 40, 8700 Horsens) இல் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
