திருமதி ஶ்ரீ ஸ்கந்தவேல் மாணிக்கம்மா
மறைவு: 15 செப்டம்பர் 2025
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை,தொண்டைமானாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீஸ்கந்தவேல் மாணிக்கம்மா 15-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி - இராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், இராசலிங்கம் - அன்னலெட்சுமி தம்பதியினரின் மருமகளும்.
ராகவன் (இலண்டன்), மணிவண்ணன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற வித்தியா, ரஜனிகாந் (கப்பல்), சாந்தன் (கனாடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோகிலராணி, யாழினி, ஜெகப்பிரதாபன் (J.P ஆசிரியர்), நளினி, சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஜன், ஹிரிதா, நிதீஸ், கவிப்பிரியா, புகழரசன், சுஜானா, சஜானி, திவ்வியா , அபிநயா, குபேரகன், கேசிகன், கோகுல்நாத்,தனஞ்சயன், அகிலன், கர்ணிகா, கவினியன் ஆகியோரின் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான சூரியகாந்தி, சந்திரமூர்த்தி மற்றும் தாயுமானவர் (அவுஸ்திரேலியா), புஸ்பராணி (நோர்வே) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சீதாலெட்சுமி, கணேசராசா மற்றும் வரலட்சுமி (கனடா), காலஞ்சென்ற சடாச்சரதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 16-09-2025 திங்கட்கிழமை அன்று தொண்டமானாற்றில் உள்ள அன்னாரது மகனது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் தொண்டைமானாறு காட்டுப்புல மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
