திருமதி. சிறீதரன் சாரதாதேவி

சிறீதரன் சாரதாதேவி

தோற்றம்: 12 டிசம்பர் 1951 - மறைவு: 30 ஜூலை 2026

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், மட். ஏறாவூர், சென்னை (இந்தியா), மட்டுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிறீதரன் சாரதாதேவி அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று மட்டுவிவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. சோமசுந்தரம் (இளைப்பாறிய ஆசிரியர்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி. வெற்றிவேல் - இரத்தினம் தம்பதியினரின் ஆசை மருமகளும்,

சிறீதரனின் அன்பு மனைவியும்,

இயக்குனர் சோமிதரன் (இந்தியா), சிறிஜா (ஜேர்மனி), சிந்துஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் மட்டுவிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2026 00:00)