Srimathi. Somasundarakurukkal Ranjana
Date of Birth: 09 July 1946 - Deceased: 01 October 2025
யாழ். வட்டுக்கோட்டை பங்குரு வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வாய்க்காற் தரவை மூத்தவிநாயகர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. சோமசுந்தரக்குருக்கள் ரஞ்சனா அவர்கள் 01-10-2025 புதன்கிழமை சிவனடி சேர்ந்தார்.
யாழ். நீர்வேலி வாய்க்காற்றரவை ஆதீன பரம்பரை குருக்கள் காலஞ்சென்ற ஆபோதாரண.சோமசுந்தரக்குருக்கள் (சுப்பண்ணாகுரு) அவர்களின் துணைவியும்,
சீதாலக்ஷ்மி (இலண்டன்), சௌத்தரி (நல்லூர்), மதுராம்பிகை (கொழும்பு), சுகன்யா (இலண்டன்), பிக்ஷாடனக்குருக்கள் (சாய்ராம் - நீர்வேலி மூத்த விநாயகர் ஆலய பிரதமகுரு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சுந்தரேசகுருக்கள், குகதாசசர்மா, சோமாஸ்கந்த ரமேஷ் குருக்கள், சுப்பிரமணிய சர்மா, துளசி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
