ஶ்ரீமதி. சோமசுந்தரக்குருக்கள் ரஞ்சனா

சோமசுந்தரக்குருக்கள் ரஞ்சனா

தோற்றம்: 09 ஜூலை 1946 - மறைவு: 01 அக்டோபர் 2025

யாழ். வட்டுக்கோட்டை பங்குரு வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வாய்க்காற் தரவை மூத்தவிநாயகர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி.  சோமசுந்தரக்குருக்கள் ரஞ்சனா அவர்கள் 01-10-2025 புதன்கிழமை சிவனடி சேர்ந்தார்.

யாழ். நீர்வேலி வாய்க்காற்றரவை ஆதீன பரம்பரை குருக்கள் காலஞ்சென்ற ஆபோதாரண.சோமசுந்தரக்குருக்கள் (சுப்பண்ணாகுரு) அவர்களின் துணைவியும்,

சீதாலக்ஷ்மி (இலண்டன்), சௌத்தரி (நல்லூர்), மதுராம்பிகை (கொழும்பு), சுகன்யா (இலண்டன்), பிக்ஷாடனக்குருக்கள் (சாய்ராம் - நீர்வேலி மூத்த விநாயகர் ஆலய பிரதமகுரு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுந்தரேசகுருக்கள், குகதாசசர்மா, சோமாஸ்கந்த ரமேஷ் குருக்கள், சுப்பிரமணிய சர்மா, துளசி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-10-2025 வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்வேலி குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2025 06:04)