திருமதி. ஸ்ரீபதி பரமேஸ்வரி

ஸ்ரீபதி பரமேஸ்வரி

தோற்றம்: 02 ஏப்ரல் 1942 - மறைவு: 06 ஏப்ரல் 2025

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீபதி பரமேஸ்வரி அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த பசுபதி - சுபத்திரையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீபதி (Chartered Quantity Surveyor) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, நடேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவசி (Quantity Surveyor) அவர்களின் அன்புத் தாயாரும்,

சுகன்யா (விரிவுரையாளர் - வவுனியா பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜய்தேவ், தேனுஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சித்தங்கேணியைச் சேர்ந்த சண்முகநாதன் - அருந்ததி தம்பதியினரின் சம்பந்தியும்,

காலஞ்சென்ற சுசீலாவதி, நடனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஜெயபதி, தர்மபதி மற்றும் தனபதி, கமலாஜினி, காலஞ்சென்ற தயாபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திராணி, தனலட்சுமி, சுமதி, சிவனேசராஜா, பிறேமா ஆகியோரின் சகலையும்,

ஸ்கந்தபிரசாத், மிருணாளினி, சிவேந்திரன், கிருஸ்ணாலினி ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இல- 149, குட்செட் வீதி இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2025 04:00)