திரு. சிறீஸ்கந்தராஜா ஷேயந்தன்

(Structural Design Engineer and Technical Manager. K.U.S Formwork & Scaddolding (pvt).Ltd)

சிறீஸ்கந்தராஜா ஷேயந்தன்

தோற்றம்: 02 ஜனவரி 1990 - மறைவு: 28 ஆகஸ்ட் 2024

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிறீஸ்கந்தராஜா ஷேயந்தன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா (புன்னாலைக்கட்டுவன்)-செல்வராணி தம்பதியினரின் ஏக புதல்வனும்,

உதயமூர்த்தி (ஆசிரியர்-யா/உடுபிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி)-ஹேமாலினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கீர்த்தனா (Software Engineer Enactor Ltd) அவர்களின் அன்புக்கணவரும்,

உத்தரா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சண்முகதாசன் (ஓய்வுபெற்ற முகாமையாளர்-HNB), யோகேஸ்வரி, யுகேந்திரராசா, காலஞ்சென்ற தயாபரன், நந்தகுமாரன், (ஓய்வுபெற்ற ஆசிரியர்-யா/சென்ஜோன்ஸ் கல்லூரி), யசோதரா, காலஞ்சென்ற முரளிதரன், அனுசாதேவி (Director-Oru Paanai Trust), காலஞ்சென்ற பஞ்சரட்ணம், அமிர்தராணி (கனடா) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான Dr.இந்திராணி, சத்தியநாதன் மற்றும் லோகராணி, காலஞ்சென்ற பாலேந்திரன், விஜயராணி, காலஞ்சென்ற பத்மநாதன், யோகராணி, காலஞ்சென்ற வின்னியசேகரம், தர்மராணி, ஜெகநாதன், மகேந்திரன் (Engineer Botswana), கிருஜா (Accountant) ஆகியோரின் அன்பு மருமகனும்,

தர்சனா (Bio Science, University of Jaffna), கஜானன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 31-08-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2024 04:00)