ஶ்ரீமதி. ஶ்ரீதர சர்மா பிரேமச்சந்திரிக்கா

(ஓய்வுபெற்ற ஆசிரியை - பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, ஆமர் வீதி.)

ஶ்ரீதர சர்மா பிரேமச்சந்திரிக்கா

தோற்றம்: 28 அக்டோபர் 1958 - மறைவு: 07 அக்டோபர் 2025

இல-141/2, 1/1, விஸ்ட்வைக் வீதி, மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்ட ஶ்ரீமதி. ஶ்ரீதர சர்மா பிரேமச்சந்திரிக்கா அவர்கள் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஶ்ரீதர சர்மா (ஓய்வுபெற்ற கணக்காளர் அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கஜேந்திர சர்மா அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-10-2025 புதன்கிழமை அன்று மதியம் 1.00 மணி முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-10-2025 வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2025 04:00)