திருமதி. சிறீதரன் மங்களகௌரி

சிறீதரன் மங்களகௌரி

தோற்றம்: 28 நவம்பர் 1960 - மறைவு: 02 ஏப்ரல் 2026

யாழ். ஊரிக்காடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், முத்தையன்கட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிறீதரன் மங்களகௌரி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருவிளங்கம் - ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், கதிரிப்பிள்ளை (சிறீரங்கம்) - பாலரத்தினம் தம்பதியினரின் மூத்த மருமகளும்,

சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இளமதி, சரவணன் (இலண்டன்), சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நிரோஷா (இலண்டன்), தர்மிகா ஆகியோரின் அன்பு மாமியும்,

தீரன், சாரதி, மித்திரன் ஆகியோரின் பேத்தியும்,

சக்திவேல், கௌசலாதேவி, குமரவேல், கஜேந்திரகுமாரி, காலஞ்சென்ற ஞானவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுசிலாதேவி (வண்ணம்), பாஸ்கரன் (குட்டிமான்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிறீரங்கம் (சந்திரி), பவானி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று குச்சம் ஒழுங்கையிலுள்ள இல்லத்தில் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2026 00:00)