Mr. Stenli Immanuvel Thangamani Nadar
Date of Birth: 29 October 1943 - Deceased: 20 May 2025
"நல்ல போராட்டத்தை போரடினேன், ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தை காத்துக்கொண்டேன்"
2திமோ. 4:7
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ஸ்டென்லி இமானுவேல் தங்கமணி நாடார் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரெபேக்கா, ரொனால்ட், ஜெரால்ட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நியூட்டன், நிஷானி, செல்மா ஆகியோரின் அருமை மாமனாரும்,
நிப்சன், நெவோன், நிம்சி, ஜேடன், ஷெனோவ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-05-2025 காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 22-05-2025 வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையும் பொரளை A.F. ரேமன்ட மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதி ஆராதனைகளின் பின் சரீரம் பொரளை கல்லறையில் (அங்லிக்கன் பிரிவு) நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
