Mrs Stgunadevi Nageswara Sharma

Stgunadevi Nageswara Sharma

Deceased: 17 September 2026

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகேஸ்வரசர்மா சற்குணதேவி அவர்கள் 17-09-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கசாமி ஐயர் - சாரதாம்மா தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற யோகீஸ்வரக்குருக்கள் - நவரத்தினம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற நாகேஸ்வர சர்மா அவர்களின் மனைவியும்,

மனோஜா (MSO அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களம்), சாருஜா, ஸ்ரீ விசாக சர்மா, விபூசனசர்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கமலாம்பிகை, காமாட்சியம்மா, காலஞ்சென்ற பஞ்சாட் சரக்குருக்கள், கலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,

ஸேஜஸ்வினியின் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-09-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 106 6638

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2026 15:19)