திரு சுப்பிரமணியம் பன்னீர்செல்வன்

சுப்பிரமணியம் பன்னீர்செல்வன்

தோற்றம்: 17 ஜனவரி 1969 - மறைவு: 01 பெப்ரவரி 2024

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், Glasgow ஸ்கொட்லண்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பன்னீர்செல்வன் அவர்கள் 01-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சேதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவபதம், தவமணி, இராசகுமாரி, இராசநாயகம், காலஞ்சென்ற நாகேந்திரன், சந்தானலட்சுமி, சௌபாக்கியலட்சுமி, காலஞ்சென்ற சாந்தலிங்கம், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற சுப்பிரமணிம், ஆனந்தன், புஸ்பவதி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஶ்ரீவேல் முருகன், தனலிங்கம், யோகேஸ்வரி, சிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நகுலேஸ்வரி, காலஞ்சென்ற பவானிதேவி, குணரட்ணம், இராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற அரியரட்ணம், றாஜினி, அருந்தவராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜசி, புவேதிகா, பவித்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிகேதன், நர்மதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மித்ரா, அதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Scotland இல் நடைபெறும்.

Live streaming  Webcast Login PIN: 132-4323

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

கிரியை:

Sunday, 18 Feb 2024   (9:00 AM - 9:30 AM)
 
Co-op Funeralcare
276 Newbold Rd, Chesterfield S41 7AJ, United Kingdom
 
தகனம்:
 
Sunday, 18 Feb 2024  (10:00 AM - 10:30 AM)
 
The Hurlet Crematorium
Hurlet Crematorium, Glasgow Rd, Glasgow G53 7TH, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2024 05:00)