திரு. சுப்பிரமணியம் வீரசிங்கம் (மகேஸ்வரன் மாஸ்டர்)

(ஓய்வுபெற்ற அதிபர்)

சுப்பிரமணியம் வீரசிங்கம் (மகேஸ்வரன் மாஸ்டர்)

தோற்றம்: 31 ஜனவரி 1945 - மறைவு: 17 அக்டோபர் 2024

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இல-10 கோணாவளை வீதி, கொக்குவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் வீரசிங்கம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்-தனலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பு-முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வரதலெட்சுமி (ஓய்வுநிலை ஆசிரியை) அன்புக் கணவரும்,

கிருஷாந்தன் (வைத்திய கலாநிதி-யாழ் போதனா வைத்தியசாலை), தனுஜியா (முகாமைத்துவ உத்தியோகத்தர்-விவசாய திணைக்களம் திருநெல்வேலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தாருணி (விரிவுரையாளர்-யாழ் பல்கலைக்கழகம்), யோகச்சந்திரா (முகாமையாளர்-கொமர்ஷல் வங்கி, வவுனியா) ஆகியோரின் அருமை மாமனாரும்,

அபினவ், அகரன், சரன்ஷன், நோஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சர்வானந்தன் (F.A), அகிலேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை), பிறேமாவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் அன்னலட்சுமி (ஓய்வுநிலை ஆசிரியை), கனகலிங்கம் (F.A), சண்முகலிங்கம் (வைத்திய கலாநிதி, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சட்டத்தரணி, சுந்தரலிங்கம்-மங்களேஸ்வரி, தர்மகுலசிங்கம் (ஓய்வுபெற்ற அதிபர்)-சரோஜினி (ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

முகவரி:-
இல. 10 (மருத்துவபீடம் முன்பு),
கோணாவளை வீதி,
கொக்குவில்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2024 04:00)