திரு. சுப்பிரமணியம் சந்திரமோகன் (மோகன், சின்ன கண்ணன்)

சுப்பிரமணியம் சந்திரமோகன் (மோகன், சின்ன கண்ணன்)

தோற்றம்: 07 மார்ச் 1967 - மறைவு: 16 நவம்பர் 2025

வவுனியாவை பிறப்பிடமாகவும், கனடா - Scarborough &  Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சந்திரமோகன் அவர்கள் 16-11-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (CTB மணியம்) - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் (மணியம்) - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தங்கராஜா (குஞ்சிஐயா), காலம்சென்ற மனோன்மணி (குஞ்சியம்மா) ஆகியோரின் அன்பு பெறாமகனும்

கிரிஜா அவர்களின் ஆருயிர் கணவரும்,

கீர்த்தனா, கிருசன் ஆகியோரின் ஆசை அப்பாவும்

அமுதாதேவி & வேலாயுதம்பிள்ளை, சிவகுமார் & நந்தினி, சந்திரகுமார் & யசோதா, அனுசியா மற்றும் காலம்சென்ற சுகுமார், ரவீந்திரகுமார் (பெரியகண்ணன்) & ஜெயகௌரி, சுகீர்தமலர் (பூமா) & நடராஜா, இளங்குமரன் & ராசாத்தி ஆகியோரின் பாசமிக்க சகோதரரும்

ஜெயா & ஐங்கரன், சசிகுமார் & திலகேஸ்வரி, கமலகாசன் & நிஷாந்தினி, காலம்சென்ற திருக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பரமேஸ்வரி, கௌரி, காந்தன், பாலன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-11-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-11-2025 வியாழக்கிழமை காலை 8:00 முதல் பார்வையும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S2E3, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் !!!! ஓம் சாந்தி !!!!"
- THAMBIRAJAH MUTTIAHPILLAI (இலங்கை, 17/01/2026 10:36)
"ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி "
- மகாலிங்கம் குடும்பத்தினர்  (கனடா / இலங்கை , 20/11/2025 08:48)
"அன்னாரின் குடுப்பத்தினருக்கு எனது குடும்பம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.. அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திப்போம்..!ஓம்நமச்சிவாய!!!!!!!!...ஓம் சாந்தி!!!!!!!!!!, ஓம் சாந்தி!!!!!!!!!, ஓம் சாந்தி!!!!!!!!"
- திரு. திருமதி. றூபேந்திரன் குடும்பம். (கனடா, 18/11/2025 09:50)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2025 00:00)