Mr Subramaniam Krishnasamy
(ஜோதிடர் கிட்டிணப்பிள்ளை)
Date of Birth: 31 October 1945 - Deceased: 02 December 2023
யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துரை கொடுக்குளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருஸ்ணசாமி அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற முருகேசு அன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி (செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரி, விக்கினேஸ்வரன், கருடகிரி, பிரகஸ்பதி, சக்திசோபிகர், காலஞ்சென்ற பாகேஸ்வரி, கனிஷ்டலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புத்திசிகாமணி, ஜெயந்திரன், காலஞ்சென்ற யோகரத்தினம், அன்னபூமணி ஆகியோரின் மூத்த சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
