Mr Subramaniam Navaratnam

Subramaniam Navaratnam

Date of Birth: 01 July 1947 - Deceased: 24 September 2026

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல- 308 கரும்புள்ளியான், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவரத்தினம்  அவர்கள் 24.09.2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,

இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலாஜினி (பிரித்தானியா), அருண (கனடா), கோபிகிருஷ்ணா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரசேகரன் (பிரித்தானியா), இராஜேஸ்வரி (கனடா), யோகரதி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானேஸ்வரி, செல்வரத்தினம், கனகரத்தினம் மற்றும் காலஞ்சென்ற ஜெயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, சோமசுந்தரம்பிள்ளை, வேலாசிப்பிள்ளை, டில்லிராஜாபாலன், கோவிந்தன், கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுஷா, குசால், கிருஷ்ணா, துளசிகன், டிதுர்ஷன், நிரோஜன், அகிம்சன், சக்தி, ஆரியன், கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 1.00 மணியளவில், அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2026 18:13)