திரு. சுப்பிரமணியம் சக்திவடிவேல்
தோற்றம்: 24 பெப்ரவரி 1948 - மறைவு: 20 அக்டோபர் 2025
யாழ். தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சக்திவடிவேல் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
யசோதா (கனடா), யுகதேவி (இலண்டன்), காலஞ்சென்ற Dr. சக்திபாலன், லோஜினி (பிரதி முகாமையாளர் - மக்கள் வங்கி, சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சசிதரன் (கனடா), ஜெயசீலன் (இலண்டன்), துவாரகா (ஆசிரியை - மன். டிலாசாலை கல்லூரி, நானாட்டான்), தவகுமாரன் (அபிவிருத்தி உத்தயோகத்தர் - பிரதேச செயலகம், சங்கானை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசநாதன், செந்தில்செல்வர், மற்றும் விஜயலட்சுமி, இராசநாயகம் (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற சத்தியதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆகாஸ், அபிலாஸ், அக்ஷயா, ஹரிஸ், ஹரித், சக்திகா, சக்திப்பிரியா, லியாசக்தி, திவ்யன், கிபிஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-10-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
