(07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1 மணி)

திரு. சுப்ரமணியம் விக்கினேஸ்வரன்

சுப்ரமணியம் விக்கினேஸ்வரன்

தோற்றம்: 18 நவம்பர் 1950 - மறைவு: 04 டிசம்பர் 2025

யாழ். கைதடி தெற்கை சேர்ந்த, தற்போது கொழும்பில் வசிக்கும் திரு. சுப்ரமணியம் விக்கினேஸ்வரன் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், போதநாயகம் தம்பதியினரின் தவப்புதல்வனும், 

காலஞ்சென்றவர்களான தம்பிரட்ணம், தையல்நாயகி ஆகியோரின் அன்பு மருமகனும்,

கௌரி அவர்களின் அன்பு கணவரும்,

மயூரன் மற்றும் பைரவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவஞானேஸ்வரி மற்றும் காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற ஜெயராஜா, மற்றும் வசந்தி, இளங்கோவன், அசோகன் மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனனும்,

சிவசோதி மற்றும் சிவராமக்கிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.  

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல- 09, விகார மாவத்தை, பொரலஸ்கமுவவில் (பெப்பிலியான சந்திக்கு அருகாமையில்) உள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2025 03:35)