Mr. Subramaniam Arulmaninathan
Date of Birth: 06 February 1958 - Deceased: 06 April 2025
யாழ். கட்டுவன் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்ரமணியம் அருள்மணிநாதன் அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் - சரஸ்வதி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - செல்லம்மா (மீசாலை) தம்பதியினரின் அன்பு மருமகனும்,
செல்லத்துரை செல்வநாயகி (கொழும்பு) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,
அற்புதமலர் (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கல்யாணி, அருணகிரிநாதன், ஜோதிஸ்வரூபிணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியகுமார், காலஞ்சென்ற சந்திரவதனி, விமலேஸ்வரன், கணபதிப்பிள்ளை (நீர்வேலி), சரஸ்வதி (பிரான்ஸ்), இந்திரா (சுவிஸ்), விக்கினேஸ்வரன் (சுவிஸ்), அமிர்தலிங்கம் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஸ்தூரி, ஆரபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
முகுந்தன், நளினி, மாதினி, வைகுந்தன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
மார்கிரெந் (Mai seippel), ரமணன் - சாந்தி, ராகவன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2025 புதன்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை Friedhofskapelle (49525 Lengerich, Germany) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
