Mr. Subramaniyam Balakumaran

Subramaniyam Balakumaran

Date of Birth: 16 May 1951 - Deceased: 05 August 2026

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் பாலகுமாரன் அவர்கள் 05-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கலாவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற தனலக்சுமி, சிவகுமாரன், விஜயலக்சுமி (அவுஸ்திரேலியா), ஞானகுமாரன் (அவுஸ்திரேலியா), திருக்குமாரன் (கனடா), அகிலாண்டதேவி (கனடா) ஆகியோரின் அன்ச் சசோகதரரும்,

கிருபாகரன் (இலண்டன்), ஜெயவாணி, பிரியதர்சினி (இலண்டன்), பிரபாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-08-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2026 00:00)