Mr. Subramaniam Balasingham

Subramaniam Balasingham

Date of Birth: 28 October 1939 - Deceased: 09 June 2025

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் பாலசிங்கம் அவர்கள் 09-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும் ,

ஶ்ரீதரன் (பிரான்ஸ்), இரவீந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையாரும்,

ஜெகதா (பிரான்ஸ்), மயூரி (பிரான்ஸ்) ஆகியோரின்    அன்பு மாமனாரும்,

ஆரணி, அம்சிகா, ஆருஜா, ராகுல், ரேகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கனகரெத்தினம், அன்னலெட்சுமி, காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், பாக்கியலெட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, பாலசிங்கம், பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நவரெத்தினம், செல்வரெத்தினம், சீவரெத்தினம், சிவமணி, கையிலாயபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2025 சனிக்கிழமை முதல் 16-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 - 5.00 மணி வரை Pompes Funebres et Marbrerie Roger MARIN (2Imp.du Rondeau, 91080 Evry-Courcouronnes, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-06-2025 வியாழக்கிழமை முற்பகல் 11.00 - 1.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2025 04:00)