திரு சுப்பிரமணியம் பரதானாலிங்கம் (பாலண்ண)
மறைவு: 27 பெப்ரவரி 2024
முல்லைத்தீவு பொக்கனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பரதானாலிங்கம் அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், கணிதம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்திய கலாநிதி தயானந்தரூபன் (பிராந்திய வைத்திய அதிகாரி - முல்லைத்தீவு), வைத்திய கலாநிதி சத்தியரூபன் (பதில் சுகாதார வைத்திய அதிகாரி - புதுக்குடியிருப்பு), சோபா (ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோநோகராதலிங்கம் (வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்) அவர்களின் மூத்த சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
