Mr. Subramaniyam Chandramaharasa

Subramaniyam Chandramaharasa

Deceased: 20 April 2026

முல்லைத்தீவு -  நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவான், முளங்காவில் ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்ரமணியம் சந்திரமகாராசா அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் - பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஏரம்பு - இந்திராணி தம்பதியினரின் மருமகனும்,

ஜேந்தினி (முளங்காவில் வைத்தியசாலை பரிசாரகர்) அவர்களின் அன்புக் கணவரும்,

தமிழ்கதிர், பகலவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, கற்பகம் மற்றும் காந்திமதி, பாலசுந்தரம், குகதேவி, புஸ்பராணி, காலஞ்சென்ற சிவயோகராணி, சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற சிவராகுலம், சந்திரமதி ஆகியோரின் அன்புத் தம்பியும்,

றஞ்சனாதேவி (பாலிநகர் மகாவித்தியாலய அலுவலக உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-04-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கரியாலை நாகபடுவான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2026 00:00)