Mr. Subramaniyam Jeyaranjan

(பிரபல வர்த்தகர், தொழில் அதிபர் - பிரான்ஸ்)

Subramaniyam Jeyaranjan

Date of Birth: 13 February 1971 - Deceased: 14 July 2025

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவு, பிரான்ஸை வசிப்பிடமாகம் கொண்ட திரு. சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா - கனகபூஷணம் தம்பதியினரின் மருமகனும்,

சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும்,

(திவ்யா, சௌமியா, ஜீவேஸ் - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2025 சனிக்கிழமை மற்றும் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை Funérarium des Joncherolles (95 Marcel Sembat - 93430 Villetaneuse) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை Funérarium des Champinghy sur Marne (739 Rue Marcel Paul - 94500, Champinghy sur Marne) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:15 - 2:15 மணி வரை 15 Crematorium de Champinghy sur Marne (560 Avenue Maurice Thorez - 94500,Champinghy sur Marne) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2025 04:00)