திரு. சுப்பிரமணியம் முகுந்தன்
(பொறியியலாளர் - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்)
தோற்றம்: 18 ஏப்ரல் 1972 - மறைவு: 13 நவம்பர் 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டி, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் முகுந்தன் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - கமலாதேவி தம்பதியினரின் இளைய மகனும்,
காலஞ்சென்ற க.வை சுந்தரராசா - கமலாம்பிகை (சித்தங்கேணி) தம்பதியினரின் மருமகனும்,
பவானி (இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சாயலன் (றோயல் கல்லூரி - 10D), வியாபினி (சைவ மங்கையர் வித்தியாலயம் - 3D) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
அழகேசன் (கனடா), ஆதித்தன் (Computer System Limited) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Dr. கயல்விழி, Dr. தமிழ்ச்செல்வி (தேசிய கண் வைத்தியசாலை), Dr. தேவானந்தர் (அமெரிக்கா), நேசானந்தர் (கனடா), Dr. சர்வானந்தர் (தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை), பிரம்மானந்தர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
