Mr. Subramaniyam Nadesalingham

(உரிமையாளர் - ஸ்ரீ அம்பாள் ஸ்டோர்ஸ் - சங்கானை)

Subramaniyam Nadesalingham

Date of Birth: 18 December 1944 - Deceased: 18 August 2026

யாழ். சங்கானை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் நடேசலிங்கம் அவர்கள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தங்கேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கனகராஜர் அவர்களின் அன்புச் சகோதரனும்,

ஜெகதா, ஜெகதீபன், ஜெகவதனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோபிநாத், தனுஷா, பிரகலாதன் ஆகியோரின் மாமனாரும்,

தரண்ஜா, அபிஷனா, லக்ஸ்மிரா, யஸ்வினி, நிகிர்ஷன், சுஜீவினி, ரிஷ்மிஜா, மகனிஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-08-2026 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2026 00:00)