Mrs. Subramaniyam Nagarathinam

Subramaniyam Nagarathinam

Date of Birth: 03 October 1943 - Deceased: 01 September 2025

யாழ். கலம்பரை கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் நாகரத்தினம் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி - தெய்வானப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

மதிவதனாவின் பாசமிகு தாயாரும்,

ஞானச்சந்திரனின் அன்பு மாமியாரும்,

நிருத்திகா, லோகாயிதன் (பெல்ஜியம்), கேதாரணி, கயதீபன், கயனி பார்த்தீபன் (சுவிஸர்லாந்து), சுபஸ்திகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கபினயாவின் அன்புப் பூட்டியும்,

சரஸ்வதி, இராசரத்தினம், நாகேஸ்வரி, பரமேஸ்வரி, மகாலிங்கம், ரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, நல்லம்மா, இராசம்மா, மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2025 04:00)