திருமதி. சுப்பிரமணியம் நாகேஸ்வரி

சுப்பிரமணியம் நாகேஸ்வரி

தோற்றம்: 05 ஜூலை 1950 - மறைவு: 14 ஜூலை 2024

யாழ் காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் நாகேஸ்வரி அவர்கள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம்-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆண்டி ஐயாவின் அன்பு சகோதரியும்,

திருத்தணிகேஸ்வரி, தணிகேஸ்வரி, காலஞ்சென்ற சுகதீஸ்வரன், சுகதீஸ்வரி, சுதேஸ்வரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,

கோடீஸ்வரன், தியாகராஜா, ஶ்ரீதர், சுஜாதா ஆகியோரின் மாமியாரும்,

சுஜிதன், ரக்ஷிகா, சபரீஸ், புகழறிவு, காலஞ்சென்ற புகழ்மதி, புகழன்பு, கெனான், செராணி, எமிமாள், திவ்யன், தஸ்வி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் கொக்குவில் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 

இல-88, மணியகாரன் வீதி,

கொக்குவில் கிழக்கு.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2024 04:00)