திருமதி. சுப்பிரமணியம் நகுலாம்பிகை (சின்னக்கா)

சுப்பிரமணியம் நகுலாம்பிகை (சின்னக்கா)

தோற்றம்: 07 செப்டம்பர் 1937 - மறைவு: 15 அக்டோபர் 2026

யாழ். வல்வெடித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் வல்வெடித்துறையையும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சுப்பிரமணியம் நகுலாம்பிகை அவர்கள் 15-10-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (கார்க்கார செல்லி) - தில்லைமாதேவி (அம்மாக்கண்டு) தம்பதியினரின் இரண்டாவது மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (மேத்திரியார்) - நீலாதாட்சி தம்பதியினரின் மருமகளும்,

விக்னேஸ்வரன், அருந்தநாயகி (ரதி), சுகுணா, காலஞ்சென்ற கோணேஸ்வரன் (கோணேஸ்), பவானி ஆகியோரின் பாசமிகு அன்னையும்,

பவானி, பஞ்சலிங்கம், உதயகுமார் (தங்கம்), அனு, தனராஜா (பொபி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சதாதேவி, சக்திவேல், விலாம்பிகை (தங்கன் அக்கா) மற்றும் புவனேஸ்வரி (ரெத்தினா), காலஞ்சென்றவர்களான தங்கவேல், புனிதவதி மற்றும் கதிரவேல், ஞானவாதி (பவா), சித்திராதேவி (சித்திரா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களா மீனாட்சிசுந்தரம், செல்வராஜா மற்றும் சோதிலிங்கம், காலஞ்சென்ற சுந்தரேஷ், வைகுந்தநாதன் (ஜெகன்), ரங்கநாதன் (சந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற ஞானம்பிகை, பரமேஸ்வரி, யோகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2026 00:00)