Mrs. Subramaniyam Pillai Ariyamalai
Date of Birth: 23 January 1940 - Deceased: 28 May 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் கன்னியாகுடி கிராமம், திருச்சங்குடையான் கோத்திரம் திருமதி. சுப்பிரமணியம் பிள்ளை ஆரியமாலை அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியண்ணன் பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற முத்தையா பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் பிள்ளை (Ceylon Trading Centre, Lanka Steel Centre) அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுதேவன் (Janatha Steels), ஆனந்த் (Lanka Steel Centre), G.அமுதா, S.வனிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
V.சரஸ்வதி, A. ஜெயந்தி, M. கஜேந்திரன் (Sevena Steel), S.சௌந் தர்ராஜன் (Asian Plywoods (pvt) Ltd.) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ் சென்றவர்களான P.N. கணேசன், முத்துக்குமாரன், சிவா, வேலூர் அம்மாள், ராஜாம்பாள் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பெரியசாமிப்பிள்ளை, நடராஜாபிள்ளை, மீனாம்பாள், சதாசிவம், ஜானகி ஆகியோரின் அண்ணியும்,
காலஞ்சென்ற துரைசாமிப்பிள்ளை - செல்லம்மாள், புஷ்பராஜ் பிள்ளை - அன்னலக்ஷ்மி, காலஞ்சென்ற மாரிமுத்துப்பிள்ளை - மனோன்மணி, காலஞ்சென்ற சுப்ரமணியப்பிள்ளை - ராஜாமணி ஆகியோரின் சம்பந்தியும்,
சயந்தன், மஹிஷினி, சுதேஷன், பிரவின், ஷவின் ஆகியோரின் அப்பாயியும்,
திவ்யா, ஸ்ரீதாரணி, தனுஷா, ஸ்ரீசிவதர்ஷன், ஸ்ரீதீபன், ஸ்ரீமாதூர்யா ஆகியோரின் அம்மாயியும்,
ஹன்விகா, கிரித்திக் வாசுதேவ், காயா, விருத்திகா, வேதவ், கைரவ், தாரா ஆகியோரின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் பொரளை ஜயரட்ண (Lotus) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-05-2026 சனிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
வாசுதேவன்:- +94 71 779 8999
ஆனந்த்:- +94 77 774 3806
www.tamilthakaval.org
