திருமதி. சுப்பிரமணியம் பிள்ளை மீனாட்சி (மீனாம்பாள்)
தோற்றம்: 04 நவம்பர் 1942 - மறைவு: 17 ஜூன் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் கன்னியாகுடி கிராமம் சாத்துடையான் கோத்திரம் திருமதி. சுப்பிரமணியம் பிள்ளை மீனாட்சி அவர்கள் 17-06-2026 புதன்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும் காலஞ்சென்ற முத்தையாபிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்
காலஞ்சென்ற சுப்பிரமணியம் பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா, காலஞ்சென்ற மணிவண்ணன், மதிவண்ணன் (Fair First Insurance Ltd) ஆகியோரின் தாயாரும்,
அருணாசலம் அவர்களின் மாமியாரும்,
ஆர்த்தி, பிந்தியா, சிநேகா ஆகியோரின் அம்மாயியும்,
ஸ்கந்தவின்னின் பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பிள்ளை (Ceylon Trading Centre), பெரியசாமி பிள்ளை, நடராஜா பிள்ளை மற்றும் சதாசிவம், ஜானகி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணபதியா பிள்ளை, பழனியாண்டி பிள்ளை, வேலூறு அம்மாள், காமாட்சி அம்மாள், மாரியாயி அம்மாள், பார்வதி அம்மாள் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-06-2026 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை பழைய மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
