திரு சுப்பிரமணியம் இராசதுரை

(உரிமையாளர் - குகன் ஸ்டோர்ஸ், நாவலப்பிட்டி)

சுப்பிரமணியம் இராசதுரை

தோற்றம்: 01 பெப்ரவரி 1935 - மறைவு: 12 பெப்ரவரி 2024

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இராசதுரை அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சின்னத்தம்பி - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜகுமாரி (ஆசிரியை கதிரேசன் இந்து மகளில் கல்லூரி, நாவலப்பிட்டி), சாந்தகுமாரி (கனடா), சிவரூபி, ஶ்ரீரஞ்சன், சிறிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகரன் (கனடா), பேரின்பநாயகம் (உரிமையாளர் - சரஸ்வதி அரிசி ஆலை S.K.M வவுனியா), நந்தினி, சத்தியபாமா ஆகியோரின் பாசமிகு மாமனரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், கனகம்மா, பத்மநாதன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு, மயில்வாகனம், அன்னலட்சுமி மற்றும் காசிப்பிள்ளை (கனடா), விமலாதேவி (கனடா), சரோஜினிதேவி மற்றும் காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

பிரவீன் (பொறியியலாளர் - கனடா), மயூரி (யாழ். மருத்துவபீடம் மூன்றாம் வருட மாணவி), கஜன் (SLIIT- கணனித்துறை இரண்டாம் வருட மாணவன்), கபிலா (கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி - நாவலப்பிட்டி), கார்த்திக், செந்தூரன், அபிராமி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று நாவலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் நாவலப்பிட்டி பௌவாகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:-

இல-12, பனிதுடுமுல்ல,

நாவலப்பிட்டி.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2024 05:00)