திரு. சுப்பிரமணியம் இரத்தினசபாபதி
தோற்றம்: 09 மே 1953 - மறைவு: 03 நவம்பர் 2025
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், இல- 20/8, வைரவர் கோவில் லேன், ஆஸ்பத்திரி வீதி, கொட்டடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினசபாபதி அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சிவகங்கை தம்பதியினரின் மருமகனும்,
சிவாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுகிர்தமாலா, தில்லைநாதன் மற்றும் பிரசாந்தன், நிஷாந்தினி, துளசிகா, நிரோஜா ஆகியோரின் அன்புத் தகப்பனும்,
சிறிரங்கன், சுரேந்திரன், சிவகுமார் ஆகியோரின் மாமனாரும்,
அகன்யா, ஆதிரன், விதுசன், துசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வில்லூன்றி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
