திரு. சுப்பிரமணியம் இரத்தினராசா (கோபால்)

சுப்பிரமணியம் இரத்தினராசா (கோபால்)

தோற்றம்: 19 பெப்ரவரி 1949 - மறைவு: 29 அக்டோபர் 2024

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், இல-324, நாவலர் வீதி, ஆனைபந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினராசா அவர்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திரகுமாரி அவர்களின் அன்புக்  கணவரும்,

சாந்தினி (இலண்டன்), சர்மிளா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரகுமார் (இலண்டன்), சஜேந்திரகுமார் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

அஸ்வின், ரஜீரா, மயூரன், ஜனனி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தவரத்தினம், தவமணி மற்றும் தவராசா, சிவமணி ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரன், ஜெயகுமாரி மற்றும் சுரேந்திரன், ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/11/2024 04:00)