Mr. Subramaniyam Sivananthan

Subramaniyam Sivananthan

Date of Birth: 01 May 1941 - Deceased: 26 January 2025

யாழ். காரைநகர் களபூமி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இல-05, அம்பலவாணர் வீதி, அத்தியடி பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவாஜினி (இலண்டன்), சிவரஞ்சனி (ஆசிரியை - யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயம்), சிவரூபினி (ஹட்டன் நஷனல் வங்கி-கைதடி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிறீராஜா (இலண்டன்), சிறீதரன் (அதிபர் - யாழ். சன்மார்க்க மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகீஷா, கிருத்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சர்வேஸ்வரி (கொழும்பு), காலஞ்சென்ற சிவபாலன், யோகநாதன் (இலண்டன்), இராஜேஸ்வரி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற சதாசிவம், பவானி, வசந்தகுமாரி, அம்பலவாணர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2025 05:00)