திரு. சுப்பிரமணியம் சிவதாசன்
(ஓய்வுபெற்ற அதிபர் - கொழும்பு இந்துக்கல்லூரி, இரத்மலானை)
தோற்றம்: 23 மே 1935 - மறைவு: 24 பெப்ரவரி 2025
யாழ். பருத்தித்துறை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவதாசன் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சி. சுப்பிரமணியம் (நில அளவையாளர்) - குலமணி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திலகவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை - கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலானை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அருள்தாசன், சிவநாயகி மாணிக்கவாசகர், காலஞ்சென்றவர்களான ஜெகதாசன், குலதாசன் மற்றும் அருள்நாயகி பாலசிங்கம், ஜெயநாயகி சிவகுமாரன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதி திருநாவுக்கரசு, சரஸ்வதி சிவபாலசிங்கம், பத்மாவதி அருளானந்தம்பிள்ளை, லீலாவதி ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-02-2025 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
