Mr. Subramaniyam Soothynathan

(Owner, Oceanick Impex)

Subramaniyam Soothynathan

Deceased: 17 December 2023

யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், வவர்செட் பிளேஸ் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மற்றும் Oceanick Impex உரிமையாளரும் ஆன திரு சுப்ரமணியம் சோதிநாதன் (சீமாட்டி சோதி)அவர்கள் 17-12-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற சுப்ரமணியம் பூரணம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும் காலம் சென்ற முருகேசம்பிள்ளை பொற்கொடி தம்பதியினரின் மருமகனும்,

அஞ்சலிதேவியின் அன்புக் கணவரும் ,

அபர்ணா (முகாமையாளர்- John Keels), அம்புஜன் (அமெரிக்கா), Dr. மனோஜ்குமார், Dr. பவித்திரா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

Dr. சசிகுமார், கிரிஸ்னி (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்

ஆதித்தன், அர்சுணன், மற்றும் அஹானா ஆகியோரின் அன்புப் பேரனும்,


சண்முகநாதனின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் 19-12-2023 நண்பகல் 12.00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் அவரின் பூதவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். சடங்குகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!

முகவரி:-

11,3/2, வவர்செட் பிளேஸ், வௌ்ளவத்தை.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2023 05:00)