Mr. Subramaniyam Thirunavukarasu

(ஓய்வுபெற்ற இலிகிதர் - Browns and Company நாவலப்பிட்டி, அகில இலங்கை சமாதான நீதவான்)

Subramaniyam Thirunavukarasu

Date of Birth: 03 December 1940 - Deceased: 08 November 2025

யாழ். மானிப்பாய் பூம்பந்தலைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டி, காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்ரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் - ஜெகதாம்பாள் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற நாவலப்பிட்டி வேலுப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் சுவீகார புத்திரனும்,

காலஞ்சென்ற காங்கேசன்துறை செல்லப்பா (செட்டியார்) - நாகம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குமாரரூபன் (இலண்டன்), கணேசரூபன் (இலண்டன்), காலஞ்சென்ற விஜயரூபா, விமலரூபா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தகப்பானரும்,

ஜெயராணி, ஹெலயிஸ், சற்குணேஸ்வரன் ஆகியோரின் மாமனாரும்,

மங்கையற்கரசி, மணி, சீதாலட்சுமி, சந்திரா, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், மோகராஜா, பத்மநாதன் மற்றும் தனலட்சுமி, காலஞ்சென்ற ஶ்ரீரங்கநாயகி, கனகசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும்,

அபினாஷ், சரண், கல்யாணி, சயன், கண்மணி ஆகியோரின் அப்பப்பாவும்,

அருணன், விதுஷன், ஆரணி ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது காங்கேசன்துறை இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2025 00:00)