Mr. Subramaniyam Thiyagarajaha
(ஓய்வுபெற்ற மின்சார சபை பிரதேச பொறியியலாளர் - சுன்னாகம்)
Date of Birth: 26 April 1936 - Deceased: 21 November 2024
யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் தியாகராஜா அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா-ரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சன், மஞ்சுளா (அவுஸ்திரேலியா), அனுஷியா, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசீலாதேவி, காலஞ்சென்ற செல்வராஜா (நீர்ப்பாசன பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தம்பிராசா (ஓய்வுபெற்ற ஆசிரியர்), பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்மலேஸ்வரி, நாகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), நாகநாதன் (ரவி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.மது, லதா (பிரித்தானியா), சுதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கண்ணன் (பிரித்தானியா), மோகன், காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பெரிய மாமாவும்,
ரேவதி (பிரித்தானியா), அமுதினி, பகீரதி, நக்கீரன் (பிரித்தானியா), Dr.செந்தூரன் ஆகியோரின் மாமனாரும்,
யாதவன், சுருதி, மிதுனா, நிக்கலஸ், வினோத், கார்த்திகா, பாரி, மீரா, Dr.கௌசிகன் ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-11-2024 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-11-2024 வியாழக்கிழமை அன்று காலை 9:30 - 11:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:45 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
