திரு. சுப்பிரமணியம் யோகநாதன் (யோகண்ணை மனேஜர்)

(முன்னாள் முகாமையாளர் ப.நோ.கூ.சங்கம், தர்மபுரம்)

சுப்பிரமணியம் யோகநாதன் (யோகண்ணை மனேஜர்)

தோற்றம்: 11 ஏப்ரல் 1947 - மறைவு: 26 மார்ச் 2026

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புன்னை நீராவி, விசுவமடுவில் வசித்தவரும் தற்போது இல- 211/7, கோவில வீதி, நல்லூரில் வசித்துவருபவருமான திரு. சுப்பிரமணியம் யோகநாதன் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி - தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌரிநேசனின் (வைத்தியர் யாழ்.போதனா வைத்தியசாலை) அன்புத் தந்தையும்,

நிறோஜாவின் (தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை) அன்பு மாமனாரும்,

யாழிசை, நர்த்தகி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

பசுபதி, கமலாவதி, பரமேஸ்வரி, வேதநாயகி, இந்திராணி, புஸ்பராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை-விசுவமடு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கனகம்மா, காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், தர்மலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, தியாகராசா, தரமஇரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-03-2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2026 00:00)