திரு. சுப்பிரமணியம் விக்னேஸ்வரன்
(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)
தோற்றம்: 08 ஜூலை 1953 - மறைவு: 10 ஜூன் 2025
யாழ். யாமா சந்தி, உடுவில் தெற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Stuttgart, கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இரத்னம் (பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
வினேசன், காலஞ்சென்ற வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரகாஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், திருநாவுக்கரசு, கமலாதேவி, தங்கேஸ்வரன் மற்றும் கணேசரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தரத்னம், கனகரத்னம் மற்றும் தங்கரத்னம், காலஞ்சென்ற நவராணி மற்றும் செல்வராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்சனா, சாய்நேகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 16-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:30 - 12:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
