திரு. சுப்ரமணியம் பிள்ளை பெரியசாமி
(Ford Motors - கொழும்பு)
தோற்றம்: 09 ஜூன் 1955 - மறைவு: 15 அக்டோபர் 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் 94 கரியமாணிக்கம் கிராமத்தைப் பூர்வீகமாகவும், கண்டி - அம்பிட்டிய வாழைமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பிள்ளை பெரியசாமி அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பிள்ளை - இளையத்தாள் அம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற அளவத்துகொட பெரியசாமிபிள்ளை (சாரதாஸ்) - பார்வதி தம்பதியினரின் மருமகனும்,
பத்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சைலஜா, வினுஜா, பாலரூபன் ஆகியோரின் தந்தையும்,
கிஷோர், அஸ்வின் ஆகியோரின் மாமனாரும்,
காமாட்சி, இராமசாமி (Kandy Tractors), நடராஜா (அசோகா டெக்ஸ்டைல்ஸ், கண்டி), லக்சுமி, புஸ்பவள்ளி, காலஞ்சென்ற மாரியாயி, ஜானகி ஆகியோரின் சகோதரரும்,
தங்கவேல்பிள்ளை, ராஜேந்திரன், காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை, மாரிமுத்துபிள்ளை, கணேஷன்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும்,
கோமளா, தங்கமணி ஆகியோரின் கொழுந்தனாரும்,
முருகேஸ் (அர்ச்சுனா ஜீவலரி, கொழும்பு), சிவஞானம் (தமிழ்நாடு டெக்ஸ்டைல், திருச்சி), அசோகர் (அர்ச்சுனா ஜீவலரி, தெஹிவளை) ஆகியோரின் மாப்பிள்ளையும்,
நிர்மலாவில் மைத்துனரும்,
தியாகராஜாவின் சகலையும்,
பாலசுப்பிரமணியம் - மகேஸ்வரி (திருச்சி), சேகர் - கமலா (சென்னை) ஆகியோரின் சம்பந்தியும்,
மித்ரேஷ், அத்யாஷ், ஆத்விக் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-10-2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
